மருத்துவம் தவமாகுமா..................!


மருத்துவம் ஒரு தொழில் அல்ல அது ஒரு கலை அது தவம் அது சேவை,அதை தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கும் இன்றைய மருத்துவர்களும், மருத்துவ  படிப்பதை  ஒரு கௌரவமாக நினைத்து படிக்கும் பணம்படைத்தவர்களையும்  நினைத்தால் வேதனைதான் மீதமிருக்கிறது .பணம் பிடுக்கும் நோகத்திலேயே இன்றைய மருத்துவர்கள் செயல் படுகிறார்கள் .கிராம புறங்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு இன்றைய தலைமுறை மருத்துவர்கள் யாரும் தயாராக இல்லை.தவமாக செய்ய வேண்டிய ஒரு செயலை சட்டத்தை போட்டு நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளது.எந்தனையோ  கிராமங்களில் இன்றும் சரியான மருத்துவம் கிடைப்பதில்லை.குறைந்த பட்சம் குழந்தைகளுக்கான மருத்துவமாவது சரியாக கிடைக்க வழி  செய்தால் நன்று.இத்தகைய மருத்துவர்கள் நமக்கு தரும் மருத்துகள் நமக்குல்ள்ள நோய்க்கான மருத்துகள்தான என்று நாம் ஆராஇவதுஇல்லை  அந்த அளவிற்கு முழுமையான நம்பிக்கை நாம் மருத்துவர்கள் மீது வைகிரோம் அனால் அவர்கள் அந்த நம்பிக்கைக்கு தகுந்தளவு  அர்பணிப்புடன் இந்த சேவையை செய்கிறார்களா என்றால் துளி அளவும் இல்லை என்றுதான் நாம் நடைமுறை யதார்த்தத்தில் பார்கிறோம்.மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மருத்துவ படிப்புக்கு ஆள் சேர்ப்பதோடு,கொஞ்சம் மனிதாமிமானம் முள்ள,மனிதத்துவ சிந்தனை உள்ள மாணவர்களுக்கும் இடமளித்தால் நன்றாக இருக்கும்.அவர்களாவது எதிர்வரும் காலத்தில் இந்த மருத்துவத்தை தொழிலாக  பார்க்காமல், சேவையாக தவமாக செய்வார்களா என்று பார்போம்.நம்மிக்கைதானே வழக்கை செய்வார்கள் என்று நம்புவோம்.