தண்ணீர்------------------------------?


காற்று,நிலம்,நீர் ஆகாயம் , பூமி  இந்த ஐந்தில் தண்ணீர் மனித தேவைகளிலே மிகவும் முக்கியமான ஒன்று.ஹைட்ரஜனையும்,ஆக்சிசனையும் தன்னகத்தே கொண்ட ஒரு நீர்மம் மனிதனுக்கு மட்டுமல்ல மரம் செடி, கொடி அனைத்திற்கும் தேவையான ஒன்று . தண்ணீர்தான் உடலுக்கு  ஜீவன் தரும் ஒரு அம்சம்.இன்றும் நாம் பருகுவதற்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது.தண்ணீரை விலை கொடுத்து வாங்க  வேண்டிய ஒரு சூழ் நிலை இன்று நிலவுகிறது,அப்படி வாங்கும் தண்ணீர் சுந்தமனதா என்று பார்த்தால் முழுமையாக 'ஆம்' என்றும்  சொல்லுவதற்க்கில்லை. இயற்கை நமக்கு அளித்த இந்த அற்புதத்தை கூட   சரியாக நமக்கு கிடைப்பதற்கு யாரும் எந்த  வழிவகையும்  செய்யவில்லை.அதை விற்பனை பொருளாக்கி வேடிக்கை பார்க்கிற கூட்டம்தான் இன்று இருக்கின்றது . இந்த நீர் ஆதாரங்களை எவ்வாறு பாதுகாத்து நம்முடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று நமக்கு நாமே சிந்திப்பதும் இல்லை.செயல் பாட்டுக்கு கொடுவருவதும் இல்லை.பிறர் மீது குற்றம் சுமத்தி விட்டு நாம்  நம் வழி பார்கிறோம் வெந்ததை தின்போம் விதி வந்தால்  சாவோம் என்றுதான் நாம் இன்று எதை பற்றியும் கவலைபடுவதில்லை.வேளாண்மைக்கான நீர் ஆதாரத்தையாவது சரியாக,முறையாக பராமரித்து வைத்துள்ளோமா அதுவும் இல்லை.நீர் இன்று அமையாது உலகு நாம் இதை உணர்ந்தால் வாழ்வது இலகு .......!