சாதனையாளர்கள்.......!

சாதனையாளர்கள் பெரும்பாலும் ஏட்டுப்படிப்பில் பெரும் ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.ஏட்டுபடிப்பை கவனத்துடன் முடித்தவர்கள் உயர்த்த நிலையில் இருக்கிறார்கள்  ஆனால்  சாதனையாளர்களாக இருக்கிறார்களா என்றால்  பெரும்பாலும் இல்லை.இந்த சாதனையாளர்களுக்கு உள்ள மனஉறுதியை யார் கொடுக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள்.சாதனை படைக்க வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து இளைஞர்களுமே நினைகிறார்கள் அனால் அதை வெற்றிகரமாக முடிப்பவர்கள் மிக சிலரே.இந்த உலகம் புதுமையை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை அதுவும் படிப்பறிவு குறைதவர்களின் வார்த்தைகளை மதிப்பதே இல்லை. அதையும் மீறிதான் இந்த சாதனையாளர்கள் வெற்றிபெறுகிறார்கள்.இளஞர்களாக இருக்கும் போது நமக்கிருக்கும் ஆர்வம் வயது ஏற ஏற கொஞ்சகொஞ்சமாக குறைத்து வாழ்தால் போதும் என்று நிலைக்கு தள்ள படுகிறார்கள்.அதையும் மீறி இந்த புதிய கண்டுபிடிப்புகளையும் அறிய பெரிய சாதனைகளையும் நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் ஏட்டுபடிப்பை சரிவர படிக்காதவர்களாகவோ அல்லது மெத்த படிக்காதவர்களகவோதான் இருக்கிறார்கள்.எத்தனையோ சாதனையாளர்கள் இந்த உலகத்தினரால் இணம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு மறைந்து   மண்ணோடு மண்ணாகி இருக்கிறார்கள்.நம்மிடையே உள்ள சாதனை படைக்கும் மனிதர்களை கண்டு கொள்ளுவோம்,அவர்களை உகுவிப்போம்,அனைவரும் சாதனையாளர் ஆவதற்கு முயற்சிசெய்வோம்.