இம்போதைய தேவை நம் நாடா? வெளிநாடா ..?

இன்று நம் பயன் பாட்டிற்காக வாங்கும் பொருள்களில் அதிகம் நம்நாட்டு தயாரிப்புகள் இல்லை.சுதேசியை விருப்புபவர்கள் இன்று நாட்டில் அதிகம் இல்லை. நமது நாட்டு தயாரிப்புகளை வாங்குபவர்களை ஏளனமாக பார்க்கவும்  , பன்னாட்டு நிறுவனத்தினுடைய தயாரிப்புகளை வாங்குபவர்களை மரியாதையுடனும் பார்க்க கூடிய  சமூகத்தை தான் நாம் பெற்றிருக்கிறோம்.தினமும் உபயோகிக்கும் பொருள்கள் முதல் ஆடம்பர,அலங்கார பொருள்கள் வரை பன்னாட்டு மோகத்தில்தான்  நாம் இருக்கிறோம்.ஏன்  இப்படி என்று காரணம் கேட்டால் அவை தரமானது என்றும் சமூக அந்தஸ்து என்ற பதில் கிடைகிறத.இவர்கள்  வாங்கும் பன்னாட்டு நிறுவன சாதனங்களில் பல அந்த நிறுவனத்தினுடைய தயாரிப்புகளே அல்ல அந்த  நிறுவனங்களின் பெயர்களை தாங்கி நிற்கும்   போலிகள்தான். நாம் உள்ளநாட்டு பொருள்கள் பல தரமானதாக இருக்கின்றது அத்தகைய தயாரிப்பும்  இந்த பன்னாட்டு மோகத்தால் மறைந்து போகிறது.இந்திய தயாரிப்பு என்றால் அது தரம் குறைவாக தான் இருக்கும் என்று ஒரு நினைப்பு மக்கள் மனதில் இருக்கும் வரைக்கும் பொருளாதாரத்தின் நிலைப்புத்தன்மை கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
குளிக்க உபயோகபடுத்தும் சோப்பு,பல் துலக்க உபயோகிக்கும் பற்பசை போன்ற தின உபயோக பொருல்களையாவது  நமது தயாரிப்பை பயன் படுத்த கூடாதா,இதில் சில முரன்பாடுகள் இருக்கிறது சிலருக்கு நமது நாட்டின் தயாரிப்பு பொருள்கள் எது என்பதே தெரிவதில்லை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பன்னாட்டு பொருள்களை உபயோகிக்கிறார்கள்.இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் போது  இது ஒரு இந்தியதயரிப்பு என்று விளம்பர படுத்தவேண்டும். நமது நாட்டின் ஜனத்தொகையில் 80 சதவிகிதம் பேர் தினம் உபயோகிக்கும் பொருள்களை வாங்கும் போது  இந்தியதயரிப்புக்கு  மாறினாலே நம்முடைய இந்தியாவின் பொருளாதாரத்தை திரத்தன்மை ஆக்கிவிடலாம் இந்திய தயாரிப்புகள் எவை எவை என்ற ஒரு பட்டியலை இந்த உடகங்கள்  வெளியிட வேண்டும்  அப்படி பட்டியல் கிடைக்கும் பட்சத்தில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் மாற்றத்திற்கு உடகங்கள் வெளியிட தயாரா ?