சங்கராச்சாரியார் விடுதலை மக்கள் கற்றுக்கொண்ட பாடம்

சங்கராச்சாரியார் உட்பட அனைத்து நபர்களையும்  சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.இது வழக்கு தமிழ்நாடு  முழுவதும் உன்னிப்ப்பக கவனித்த ஒரு வழக்கு.இந்த வழக்கு தீர்ப்பின் மூலம் மக்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பினை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.தன்னிலை உணர்ந்து போகிற போக்கில் வாழ கற்று கொள்ளவேண்டும் என்ற உன்னதமான உண்மையை உணர்த்துகிறது. இவர்கள் தான் சங்கர் ராமன் கொலைக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை.இந்த வழக்கில் சங்கர் ராமனின் மனைவியே பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாக அறிய வருகிறது .கொலையுண்டவரின் மனைவியே சொன்ன சாட்சியத்தை மாற்றி சொல்லுகிறார் என்னும் பொழுது அவர் எந்த சூழ்நிலையில் ஏன்  மாற்றி சாட்சியம் சொல்லுகிறார் என்று நீதிமன்றம்  அறியவரவில்லை . எதையும் மாற்றமுடியும் அதில் நீதியும் அடக்கம் என்று நினைப்பு மக்களுக்கு வருவதற்கு முன் இவர்கள் இல்லை என்றால்  யார் செய்தார்கள் என்று இந்த உலகத்திற்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை இந்த நீதி துறைக்கும் காவல்  துறைக்கும் இருக்கிறது. சூரா பத்மனை சம்ஹாரம் செய்த கடவுளின் பெர்யர் கொண்ட நீதிபதி தான் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதிருக்கும் மதிப்பை காப்பாற்றி கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைக்கு சட்டத்துறைக்கு இருக்கிறது.சாதாரண மனிதன் அடங்கி ஒடிங்கிதான்  வாழவேண்டும் என்ற நிலை இன்று நேற்றல்ல காலங்காலமாய் தெடர்கிறது. திரைப்படங்களில்  காட்டுவதைப்போல காட்சிகள் இன்று மக்கள் மன்றத்தில் அரங்கேற தொடக்கி விட்டன என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.இத்தனை ஆண்டுகள் கழித்து தீர்ப்பு சொல்லும் போது இந்த கொலைக்கான காரண காரியங்களை தீர்ப்பில் சுட்டி காட்டி  இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நீதியின் மீது ஒரு மன ஆறுதலாவது வந்திருக்கும்.எல்லாமே ஒரு வட்டம் தான் மீண்டும் நீதி தொடக்க நிலைக்கு திரும்பும் என்ற சாமாதனத்துடந்தான் வாழவேண்டி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கொலைகள் சாதாரணமாகிவிட்ட படியால் இன்னும் சிறிது காலத்தில் இது எல்லாம் மறந்து விடும் என்பது தான் உண்மை ஆனால் காலம் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கும் அதன் பிடியில் யாரும் தப்ப முடியாது!