ரஜினி .. பா.ஜ.க.. ஆதரவு...இது ஆண்டவன் இட்ட கட்டளையா?

ரஜினியிடம் பா.ஜ.க வை ஆதரிக்க சொல்லி ஒரு பத்திரிக்கை ஆசிரியர் கேட்டுக்கொண்டதாக தெரிகின்றது  .ப.ஜ.க வை சேர்ந்த தலைவர்கள் உடகங்கள் மூலமாக ரஜினியின் ஆதரவை நேரடியாகவே கோருகிறார்கள்.இதற்க்கெல்லாம் ரஜினி எந்த அளவிற்கு அசைந்து கொடுப்பார்,ஆதரவு கொடுப்பாரா என்பது  தெரியவில்லை.அரசியலில் அவருக்கு முன்பு கிடைத்த அனுபவம் அவரை நிச்சயமாக நிறைய சிந்திக்க வைக்கும்.இருப்பினும் தன்வாழ்வில் உயர்வதற்காக உதவியவர்கள் கோரும்போது அதை தட்டி கழிக்க முடியாமல் ஒரு தர்மசங்கடமான நிலைக்கு அவர் வரக்கூடும் .காரணம் செய் நன்றி மறக்க கூடியவராக அவர் தெரியவில்லை எனவே  தவிர்க்க முடியாமல் பா.ஜ.க.வை ஆதரிக்க கூடிய ஒரு முடிவை  எடுக்கும் சூழ்நிலைக்கு அவர் வரலாம் அதன் விளைவாக ஒரு இறுக்கமான மனநிலைக்கு  மீண்டும் அவர் வரவேண்டிய இருக்கும்.யாருக்காகவோ அவர் பா.ஜ.க வை ஆதரித்து அந்தகட்சி வெற்றிபெறும் பட்சத்தில் இவருடைய   நிலையில் எந்த இக்கட்டான காட்சிகளும்   வர வாய்ப்பில்லை காரணம் வெற்றிக்கு பின் ரஜினியை ப.ஜ.க தேடப்போவது இல்லை.தோல்வியை தழுவும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க பெரிதாக அலட்டிகொள்ளாது காரணம் அதன் நிலையில் இருந்து அது  கீல்ழிறங்காது  அனால் ரஜினியின் நிலை,செய்நன்றி கடன் என்று சொனால் யார் கேட்டு சமாதனாம் ஆவது ? மோசமான விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் மேலும் ஒரு இறுக்கமான சூழ்நிலைக்கு தள்ள படுவார். அதே பத்திரிக்கை ஆசிரியரின் ஆலோசனையில் முன்பு ரஜினி பெற்ற அரசியல் அனுபவம் அவருக்கு இந்த நிலையில் சிந்திப்பதற்கு  கை கொடுக்கும்.ஆதரித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் பா.ஜ.கவின் கட்சி  தலைமை பொறுப்பை ஏற்பதை விட தனியாக கட்சியை தொடக்கி  பா.ஜ.க.வை ஆதரிப்பதே நலமாக இருக்கும்.தேவைபட்டால் அரசியலில் இருக்கலாம் இலையேல் அறிக்கை விடும் ஒரு கட்சியாக மாற்றிவிடலாம். மிகுந்த சிரமத்திற்கும் ஆளாக தேவை இல்லை . இது ஆண்டவன் இட்ட கட்டளையா இல்லை அரசியலில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையா.தன்  அரசியல் வாழ்கை ஆண்டவன் கையில் இருப்பதாக சொல்லுபவருக்கு அந்த நிலை கைகூடுகிறதா.