சென்னை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது

சென்னை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்ற செய்தி நமக்கு ஒன்றும் புதிய செய்தியாக இருக்காது காரணம் நாம் அன்றாடம் சந்திக்கும் நினைவுகளே நமக்கு சொல்லும் பாடம்தான் என்றாலும் நம்முடைய மாநிலத்தின் தலை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று தெரியவரும் போது நாம் விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை  இருக்கிறது.இதற்க்கு என்ன காரணம் ஊழல் செய்பவரை விட ஊழல் செய்ய தூண்டுபவர்கள்தான் இன்று அதிகபடியாக இருக்கிறார்கள். மற்றும் நம்சொந்தங்களில் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழக்கூடிய மனிதர்களுக்கு யாரவது மரியாதை தந்திருக்கிறோமா என்று சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்து பணத்தை சேர்த்துவைத்திருக்கும் நபருக்குத்தான் நாம் எந்த இடத்திலும் மரியாதை செய்கின்றோம்.நம் உறவுகளாக இருந்தாலும் அவர்களை திருத்துவதற்கு முயற்சி எடுத்திருக்கிறோமா குறைந்த பட்சம் அவர்களை நம் வாழ்வில் தவிர்த்திருக்கிறோமா இல்லவே  இல்லை அவர்களுக்குதான் இங்கே திருமனவிழாவாக இருந்தாலும்,இறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும்  முதல் மரியாதை முக்கியத்துவம் எல்லாம்,  உறவுகளிடையே இதை போல் அங்கீகாரம் கிடைத்து விட்ட பிறகு, தான் செய்யும் ஊழல் நிச்சயமாக தவராகவேதெரியாது அது மேலும் மேலும் வளரத்தான் செய்யும். ஊழல் செய்பவரை அண்ணாந்து அசிங்கத்துடன்  பார்த்த பார்வை போய் பிழைக்க தெரிந்தவன் என்ற ஆச்சரியத்துடன் பார்பதற்கு சமுதாயம் பழகிவிட்ட பிறகு, யாரொருவர் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும்   ஊழல் செய்யாத  பாவப்பட்ட மனிதரை தான் இன்று அண்ணாந்து அசிங்கத்துடன் பார்க்கிறோம். பிழைக்க தெரியாதவன்என்ற அடைமொழியாலே வசைபாடுகிறோம்.  தன்னுடைய மனைவி இடமே அவப்பெயர் வாங்கி தன்னுடைய தள்ளாத காலத்தை தவிப்புடன் வழக்கை வாழ்கிறார்கள்.தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஊழல் செய்தவர்கள் எந்தவித குழப்பப்மும், குற்ற உணர்வும்  இல்லாமல் நிமதியாக தன்னுடைய முதுமையை கழிக்கிறார்கள். இதுதான் எதார்த்தம் என்று சொல்லியே எல்லோரும் ஊழலின் வலியோடு வாழபழகிவிட்டோம். அது இல்லாமல் வாழ்வதுதான் கடினம் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். உண்மையான வாழ்கை போராட்டத்தை உணர்ந்து கொண்டாலொழிய இந்த ஊழல் ஒழியாது அது நிழலை போல் நம்முடனே இருந்து கொண்டே இருக்கும்.