நிறை குடம் தளும்ப கூடாதா?
நிறை குடம் தளும்ப கூடாதா, நிறை குடம் தழும்பாது என்ற வாக்கியத்தை உருவாக்கி விஷயம் தெரிந்தவர்களை வாய்மூடி மௌனியாக்கி விட்டு, ஒன்றும் தெரியாத அரை குறைகள் ஆட்டம் போட்டு கொண்டு திரிகின்றன,குதுகுளிப்பதர்காகவே இந்தகைய வாக்கியத்தை உருவாக்கி இருக்க வேண்டும். நிறை குடம் செய்த வெற்றிகரமான காரியத்தை குறை குடம் செய்ததாக குறிகொண்டு வெற்றிகளிப்பில் பங்கெடுக்கும் போது அதை உண்மையில் அந்த காரியத்தை செய்து முடித்தவர் எது தெரியாதவர் போல் இருக்க வேண்டும் காரணம் அவர் நிறை குடம் அல்லவா அது தலும்பலாமா, இப்படி மௌனியாக இந்த நிறைகுடங்கள் எல்லாம் இருந்ததால்தான் இன்றைக்கு அரை குறை குறை குடங்கள் எங்கு பார்த்தாலும், அனைத்து மட்டத்திலும் உயர் நிலை யில் இருக்கின்றன. இத்தகைய மனிதர்களுக்கு அவர்கள் வகிக்கின்ற பதவிக்கு உண்டன எத்தகைய தகுதியும் இல்லாமலேயே, பிறருடைய உழைப்பின் வேர்வையில் வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கு யார் காரணம் என்ற உண்மையை அறிவதற்கு முனைவதில்லை, வேலை முடிந்தது என்று மட்டில் முடித்து கொள்கிறார்கள் என்னவேதான்,நல்ல திறமைசாலிகள் எல்லாம் உலகத்தின் பார்வையில் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். "யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே" என்று கவிஞர் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது.எந்த பதவியில் யாரை வைக்க வேண்டும் என்ற ஒரு விசாலமான பார்வை நம்மில் பலருக்கு தெரியவில்லை என்னவேதான் இந்த நிறை குடங்கள் தலும்பவேண்டும் அப்போதுதான் இந்த உலகத்திற்கு தெரியும் அசல் எது நகல் எது என்று. அது எந்த இடமாக இருந்தாலும் நாம் செய்த வேலையின் வெற்றியை, உழைப்பின் பலனை நாம் தான் அடைய வேண்டும், அதை அண்டங் காக்கைகள் அனுபவிக்க இடம் தரலாகாது,எனவே இதற்காகவாவது நிறை குடன்களே தயவு செய்து தலும்புங்கள் வளமான எதிர்காலத்திர்க்காகவாவது நிறை குடங்களே நீங்கள் தளும்புங்கள்.