கோவில் தொழில் நல்ல வருமானம்

கோவில்களை கட்டி பராமரித்துவருவதுதான் இன்றைக்கு சிரமமில்லாத நல்ல தொழிலாக இருக்கிறது.பரவலாக ஆங்காங்கே திடீர் என்று கோவில்கள் முளைப்பது இதைத்தான் நமக்கு காட்டுகிறது.கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று சொன்னதையே கருத்தாக கொண்டு கோவில்களுக்கு மத்தியில்தான் இன்று நாம் வாழும் சூழ் நிலையை உருவாக்கி இருக்கிறோம். தடுக்கி விழுந்தால் ஒரு கோவில் என்ற நிலையை நாம் இன்றைக்கு கண்கூடாக பார்க்கிறோம் இந்த கீழ்மட்டம் மேல் மட்டம் என்ற பிரிவினை எல்லாம் கிடையாது எல்லமட்டதிலும் அவரவர் சக்திக்கு உட்பட்டு இந்த தொழிலை தொடங்கும் நிலை உருவாகிவிட்டது. கோவில் கட்டுவதில் இருந்தே இந்த வசூல் ஆரம்பித்து விடுகின்றது.கோவில் கட்டி முடித்தவுடன் யாரவது ஒரு பெரியவரை அழைத்து பெரிய விழாவாக கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டால் அன்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கி விடுகின்றது. கோவில்கள் தொழில் முறை ஆனபின் அந்த தொழில் வளர்வதற்கான அத்தனை  வரைவுகளையும் ஆராய்ந்து செயல்படுத்த தொடங்கிவிடுகின்றனர். ஜோதிட நண்பர்கள் மூலம் ஆள் சேர்ப்பது.ஆன்மீக சுற்றுலா செல்கின்ற பேருந்து,சிருந்து வாடகை மகிழுந்து அத்துணை ஓட்டுநர்களையும் ஒருங்கிணைத்து இந்த கோவில்களுக்கு  அவர்கள் வாகனத்தை அழைத்துவருவது. அப்படி அழைத்துவருவதற்காக  ஓட்டுனர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது, இதுபோன்ற அடிப்படையில் கோவிலை பிரசித்தி படுத்தி கொள்வதற்கும் தொழிலை வளர்த்து கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதுபோல் வளர்ந்த எந்தனையோ கோவில்கள் நாம் கண்கூடாக பார்கிறோம்.  அது அவர்களுக்கு கைமேல் பலன் தருகிறது. இது போதாது என்று ஊடகத்தின் வாயிலாக விளம்பரபடுத்துவது, தேவையில்லாத வதந்திகளை பரப்பிவிடுவது என்று எதாவது ஒருமுறையில் இவர்கள் தங்களுடைய கோவில் தொழிலுக்கு நன்றாக அடித்தளம் அமைத்து கொள்கிறார்கள். அடித்தளம் அமைந்த பின்னால் இவர்களுக்கு எந்தவிதமான விளம்பரமும் தேவை இல்லை காரணம் அங்கு செல்லும் மக்களே மிக பெரிய விளம்பர ஊடகமாக மாறிவிடுகிறார்கள். கோவில் தொடக்கம் முதல் இன்றுவரை செல்லும் பக்தர்களின் நிலை பொருள் ரீதியாக அப்படியீதான் இருக்கிறது ஆனால் அதை தொடங்கியவர்கள் எங்கோ உயர்ந்துவிட்டார்கள் என்பதை காணமுடிகிறது. அன்றைய மன்னர் காலத்தில் கோவில்கள் எதற்காக தோற்றுவிக்க பட்டது என்பது விவாதத்திற்குரியது ஆனால்  அதைவைத்து பணம் மண்ணும் நோக்கம் இருக்காது என்பதை நம்பலாம்.ஆனால் இன்றைக்கு காவி உடை தரித்து மரத்தின் கீழ் அமர்ந்தால் அங்கே யார் என்ன என்தற்காக என்ற கேள்வி இல்லாமல் மக்கள் கூடிவிடுகிறார்கள்.  தங்கழுடைய வாழும் வீட்டையே கோவிலாக பாவித்து பணம் பண்ணும் நபர்களும் நம்மிடையே உலவுகிறார்கள் . இப்படி பலதரப்பட்ட கோவில்களுக்கு ஆட்களை  கொண்டுவருவதற்கு இடைத்தரகர்கழும் இப்போது முளைத்துவிட்டார்கள். மன அமைதியை தேடித்தான் கோவில்களுக்கு செல்வதாக கூறுகிறோம் ஆனால் நாம் அங்கு சென்று மன அமைதியுடன்  இருக்கிறோமா என்றால் அது ஒரு கேள்விக்குறிதான். அச்சு ஊடகங்களில் திடீர் திடீர் என்று முழுபக்கத்திற்க்கு சாமியார் விளம்பரங்களும் கோவில் விளம்பரங்களும் நம்மை திக்கு முக்கட வைத்து  விடுகின்றன.கோவில்களும் தெய்வங்களும் நம்மை செழுமை படுத்தத்தான் கோவில் தொழில் நடத்துபவர்களை செழுமை படுத்த அல்ல என்பதை எளியவர்கள் புறிந்து கொள்ளவேண்டும்.