மாணவர்கள் கட்டுபாடற்ற காற்றாற்று வெள்ளமா

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள்  பேராசிரியர் ஒருவரை தாக்கி  கொலை செய்யும் அளவிற்கு நடந்து  கொண்டார்கள்  என்றால் இந்த மாணவ சமுதாயம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை.இந்த அளவிற்கு மாணவர்கள் உணர்சிவயப்படுவர்களா என்று நினைத்து பார்க்கும் போது எதிர் கால இந்திய இவர்கள் கையில்தான் என்று கூறிவரும் கூற்றை நாம் மறு பரிசீலனை செய்தாகவேண்டும்.கட்டுபாடற்ற மாணவர்கள்  காற்றாற்று வெள்ளம் போல அது எதற்கும் பயன் தராது  அதை முறைபடுத்தி பயன்டுத்தினால் நன்மை அதிகம்.
தன்னுடைய மகனுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவேண்டும் என்றுதான் எந்த ஒரு தாயும் தந்தையும் எண்ணுவார்கள் அதற்காகத்தான் கட்டுபாடுகள் நிறைந்த கல்லூரிகளிலே கொண்டுபோய்சேர்கிறார்கள்.சரியான முறையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இன்றைய மாணவ சமுதாயம் தன்னையும் சீரழித்து கொண்டு இந்த சமுதாயத்தையும் சீரழிக்கின்ற  வகையில் நடந்து கொள்கிறது. இது வளராமல் இருப்பதற்காக சட்டத்தின் துணை கொண்டு மிகக்கடுமையாக ஒடுக்க படவேண்டும். இல்லை என்றால் இந்த சம்பவம் விரிந்து பரவ தொடங்கிவிடும்.மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுபோடுகள் தான் இதைபோல் செய்கைகளுக்கு காரணம் என்று கனவு கான்பபவர்கள் தினவு எடுத்து வாதிட்டாலும். இந்தகைய செய்கைகள் மன்னிக்க முடியாதவை.மாணவபருவத்திலேயே அதிகாரத்தை கையில் எடுக்கும் பழக்கம் நல்ல ஒரு முன் உதாரணமாக இருக்க முடியாது.இளையவர்களின் சுதந்திரம் என்று கட்டுபாடுகளை உடைத்து எரிய நினைப்பது நல்லதல்ல.இத்தகைய வன்மங்கள் தன் தந்தையின் கட்டுபடுகளின் மீதும் திருப்புவதற்கு வாய்புகள் இருக்கின்றன எனவே இதை மாணவசுதந்திரம் என்ற போர்வையில்  மறைந்து கொள்ளாமல் பார்த்துகொள்ளுவது நல்லது.கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள்தான் உண்மையிலேயே அக்கறையுடன் நடந்து கொள்ளுகிறார்கள் தனக்களித்த பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியை செய்கிறார்கள்  என்று பொருள்.ஏதோ வாங்கும் ஊதியத்திற்கு பணியாற்ற நினைக்கும்,முழு சுதந்திரம் என்றபெயரில் மாணவர்களின் போக்கில் விட்டுவிடும்   நபர்கள்  தான் மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இன்றைய மானவசமுதாயம் அரசியலோடு இணைந்தே பயணிக்க தொடக்கி விட்டது இதுவும் கூட புறக்கணிக்க படவேண்டிய ஒன்றுதான். இந்த மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்தவும் கல்வி முறையை சீர்படுத்தவும் நல்முயற்சி எடுப்பது தான் இப்போதைய தேவை அதை செய்வதற்கு முன்வந்தால் நல்லது