புலம் பெயர்ந்த தமிழர்களின் கறுப்புநாள் அறிவிப்பு சரிதானா.....?

புலம் பெயர்த்த தமிழர்கள் இலங்கை வடக்கு மாகான சபை பதவி ஏற்பு நாளை கறுப்புநாளாக அறிவித்திருப்பதாக தெரிகிறது.தீப்பற்றி எரியும் போதுதான் இந்த ஈழ தமிழர்கள் பெயர்த்தார்கள்.தன்னையே எரித்தாலும் என்னுடைய எரியூட்டிய  சாம்பல் எங்கள் நிலங்களில்  நாங்கள் உலவிய மண்ணில் பரவி கிடக்கட்டும் என்று இறுமாப்புடன் இருந்தவர்கள் ஈழ வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு  தோளோடு தோள் நின்றவர்கள்தான்  இன்றைக்கும் பல இன்னல்களுக்கு மத்தியிலும்  இலங்கையில் வாழும்   தமிழர்கள்.இப்போது தான் விக்னேஸ்வரன் பதவி ஏற்றிருக்கிறார் அவரின் செயல் பாடுகளை அறிவதற்கு கொஞ்சம் கல அவகாசம் கொடுக்க வேண்டும். அவரின்  யோசனையில் தமிழர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அவர் என்ன செய்கிறார். குறைந்த பட்சமாக ஈழம் அமைவதற்கு அவருடைய  வழியில் என்ன செய்யவிருக்கிறார் என்று அவதானித்த பின் தான் எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடுவது நல சிந்தனை.போராட்ட காலத்தில்அந்த மண்ணில்  இருந்தவர்கள்தான் இந்த விக்னேஷ் வரணுக்கும் வாக்களித்து இருக்கிறார்கள் .சற்று பொறுமையுடன் இருந்து பார்க்கலாம். அதைவிடுத்து பதவி ஏற்பு  நாளை கறுப்புநாளாக ஏன் அறிவிக்க வேண்டும்.இவர்கள் ஏன் புலம் பெயர்த்தார்கள்.போராட்டத்தையும்,போரடுபபர்களையும்  அனாதையாக விட்டு விட்டு தங்களின் உயிர்  பாதுகாப்பிற்காக பெயர்த்தார்களா இல்லை வேறு ஏதேனும் கரணம் இருக்கிறதா நமக்கு தெரியவில்லை.எது நடந்தாலும் என்மன்னோடு  போகட்டும் என்று இருந்தவர்களை இவர்கள் கருப்பு நாள் என்று அறிவித்து அங்குள்ள அரசியலை இவர்கள் கையில் எடுக்க முனைகிறார்களா. பெற்ற தாயை தவிக்க விட்டு விட்டு வீட்டை தவிக்க விட்டு ஓடிபோய் விட்டு பலவருடங்கள் கழித்து வந்து இறந்து விட்ட என் தாயிக்கு  ஏன் சமாதி கட்டவில்லை என்று கேட்கும் மகனைபோல்தான் இன்றைய புலம் பெயர்தவர்தவர்களின் கறுப்புநாள் அறிவிப்பு இருக்கிறது.