நேரம் சரியில்லையா சகோதரா சிந்தியுங்கள்

எனக்கு நேரம் சரியில்லை என்று முடங்கி கிடப்பது என்பது அனைவரது வாழ்கையிலும் வந்து செல்ல கூடிய ஒன்று.  அனைவருக்குமே ஒரே நேரம் தான் இந்த உலகத்தில் கொடுக்கபட்டிருக்கிறது அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய நேரம் சரியானதா அல்லது சரியில்லையா என்ற தீர்மானம் வருகிறது என்றுமே நம்முடன் அல்லது நாம் பழகுகின்ற மனிதர்களை பொருத்துதான் நமது வாழ்கையின் பாதை செல்கிறது நமது நேரமும் நமக்கு சாதகமாக இருக்கிறது. முதலில் நாம் நம்மை பற்றி மனசுத்தியுடன் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் வாழ்வின் எந்த நிலையையும் அடைய முடியும் ஆனால் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளவது நாம் நல்ல நேரத்தை நோக்கி பயணிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலில் தேவையில்லாத நமக்கு  முற்றிலும் ஒவ்வாத செய்கைகளை நினைத்து பார்ப்பது தவிர்க்க வேண்டும்.எதை எப்போது செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்வது தான் நல்லது. நாம் நினைப்பது  செய்வதுதான் சரி என்ற நினைப்பை விட்டு விட்டு நாம் நினைப்பது சரியாக இருந்தாலும் அதை சிந்தித்து பிறகு செயலாக்கத்திற்கு கொண்டுவருவருவது நல்லது.அதிகம் போசுவதை விட அதிகம் கேட்பது நலம் எம்போதுமே எதிலுமே முதன்மையாக கருத்து சொல்லவதை தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் முற்றிலும் சரி என்று நினைத்தாலும் நிதானமாக செய்வதுதான் நன்று.நம்முடன் இருப்பவர்கள் அனைவருமே நம் நல்லதிற்காக நம்முடன் பழகுகிறார்கள் என்ற நினைப்பை தவிர்க்கவேண்டும். முக்கியமாக சிந்திக்காமல் கோபபடுவதை முற்றிலுமாக விலக்கவேண்டும்.நம்முடைய கோபம் எபோதுமே நமக்கு நல்லது செய்வது இல்லை.நமுடைய வாழ்வில் ஒரே வகையான  இக்கட்டான சூழ்நிலைகள் திரும்ப திரும்ப நிகழ்வது நம்மில் பலபேர் சந்தித்திருப்போம் ஆனால் நாமில் யாராவது ஏன் மீண்டும் மீண்டும் ஒரே வகையான இக்கட்டான சூழ்நிலைகள் நம்மை ஆட்கொள்கிறது என்று சிந்திக்க மறுக்கிறோம்.தற்காலிகமாக ஒருதீர்வைத்தான் நம்மில் அதிகமானவர்கள் நாடுகின்றோம், இதை போல் சூழ்நிலை மீண்டும் வராமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வை யார் சிந்திக்கிறார்களோ அவர்கள்தான் வாழ்கையில் நல்ல நேரத்தை சந்திக்கின்ற நபர்களாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள், இதைதான் நம் முன்னோர்கள் "நல்ல  மாட்டிற்கு ஒரு சூடு என்று சொல்லுவார்கள்" ஒருமுறை நமக்கு ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையை மீண்டும் வராமல் பார்துகொள்ளவேண்டும் அதுதான் நமக்கு,நம் முன்னேற்றத்திற்கு நம் வாழ்வின் அமைதிக்கு வழி வகை செய்ய கூடிய நல்ல காரணியாக இருக்கும், மீண்டும் மீண்டும் நாம் வாழ்கையில் சூடு பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்கை பாடத்தை சரிவர புரித்துகொள்ளமலேயே மன அழுத்தத்திலேயே நாம் வாழ்கையை வாழவேண்டிவரும்.நம்முடைய பலத்தை பொறுத்துதான் நாம் தூக்கும் எடை அமையவேண்டும்,அதிக எடையை  தூக்க நினைப்பது தவறல்ல ஆனால் அதற்க்கு முன் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும் முதலில் எடையை  தூக்கிவிட்டு பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டையான துணிச்சலை முதலில் நம்மை விட்டு அகற்றவேண்டும்.எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்ற தேவை இல்லாத கற்பனையைநிறுத்திவிட்டு வாழ்ந்து  பாருங்கள் .இதுதான் நல்ல நேரத்தை நோக்கி செல்வதற்கான முதல் படி.அம்பு ஒன்று நம்மை நோக்கிவருகிறது,அதற்கான கவசம் இல்லை  என்றால்அதன் பாதையை விட்டு விலகி எதிர்கொள்ளுவதுதான் நன்மையை தரும். நல்ல நேரத்தை நாம் தேடி செல்வதை விட எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற சிந்திப்பது உங்கள் வாழ்கையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும்.