இளமையில் வறுமை வரப்ரசாதம்

இளமையில் வறுமை என்பது மிக கொடுமை என்பது தெரியும் ஒரு மனிதனுக்கு இளமையில் வறுமை வரவே கூடாது என்று எண்ணம் இருந்தாலும் , ஆனால் அதுதான் ஒரு இளைஞனை  செம்மை படுத்த  உதவுகிறது. எவ்வளவு  செலவு செய்தும்  கற்றுக்கொள்ள முடியாத வாழ்வியல் தத்துவத்தை கற்றுத்தர உதவுகிறது.இளமையில் வறுமை தரும் படிப்பினை நம்முடைய எதிர்காலத்தை வளமையாக்கவும்,நமக்கு எதையும் தாங்ககூடிய மனஉறுதியை அளிக்கிறது,இந்த உலகத்தையும் பணத்திற்கான மதிப்பையும் நமக்கு ஒருசேர விளங்க வைக்கிறது.பணபோதையால் கெட்டு சீரழிவதை  தவிர்த்து கல்வி என்ற தேனமுதை நமக்கு வழங்குகின்றது. குடிசுவரை நோக்கி நம் வாழ்வை தள்ளிக்கொண்டு போகாமல் கோபுரத்திற்கு இழுத்து செல்லும் வல்லமை கொண்டுள்ளது,இளமையில் ஏற்படும் வறுமைக்கு நண்பர்கள் தோள்கொடுப்பார்கள் மனம் தொய்வில்லாமல்  பார்த்து கொள்ளுவார்கள்.இதன் மூலம் ஏற்படக்கூடிய படிப்பினை நம் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது.இளமையில் உணரவேண்டிய ஒரு உணர்வு வறுமை, அது  இயற்கையாகவே அமைவது ஒரு வரப்ரசாதம்தான். சில இளைஞர்களுக்கு பணத்தின் அருமையை புரியவைப்பதற்காக பணபோதையால் தேவையில்லாததை கற்றுக்கொண்டு எதிர்காலத்தை வீணடித்து விடாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கள் செயற்கையான ஒரு வறுமையை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்கள் அது பல இடங்களில் விபரீதமாக முடியும். எனவே இளமையில் வறுமை  என்பது மனிதனுக்கு கிடைத்த ஒரு அற்புதமான சக்தி அதனை ஏற்றுக்கொண்டு வாழ பழகிகொள்ளுங்கள்.ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள். இளமையை விட, முதுமையில் வறுமை தான் மிக கொடியது அதை புறம் தள்ள இளமையிலேயே வறுமையை சந்தித்து வைர நெஞ்சோடு வறுமையை வெட்டி வீழ்த்திவிட்டு வீறுகொண்டு வாருங்கள்