தமிழ் மொழி வரி வடிவத்தில் என்ன குழப்பம்

தமிழ் மொழியின் வரி வடிவத்தை மாற்றவேண்டும் என்ற குரல் இப்போது பரவலாக பலராலும் முன் வைக்க படுகிறது.தமிழ் மொழியை எளிமை படுத்துவதற்காக இதை செய்ய வேண்டும் என்றும். பல முன்னாள் அரசியல், மற்றும் மக்கள் தலைவர்கள் சொன்னதை இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும் இதை முன் எடுக்கிறார்கள்  . தமிழ் மொழியை வளர்பதற்கு இது பயன் படும் என்று இவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது எந்தவகையில் தமிழை வளர்க்கும் என்று தெரியவில்லை. உச்சரிப்பு இனிமை கொண்ட மொழி தமிழ் அதன் வரி வடிவத்தை மாற்றவேண்டியதன் அவசியம் என்ன என்பதை இவர்கள் தெளிவாக சொல்ல வில்லை.ஒரு மொழி உயிரோட்டமாக இருப்பதற்கு அதன் தனித்தன்மைதான் மிகவும் முக்கியம். நம்மிடம், நம்மொழியில் என்ன இல்லை எல்லாம் இருந்தும் அதை வெளிகொண்டுவருவதர்க்கான முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர இதை போல் அபத்தமான முயற்சியை முன் எடுப்பது ஆபத்தானது.சிலர் செய்யும் சிறுதவறுகளை எழுத்து பிழைகளை திருத்திகொள்வதர்கான செய்கைகளை வளர்க்கவேண்டும் அதை விடுத்து கையை சுட்டு கொண்டால் விரலை வெட்டுவது சரியல்ல  இப்போது உள்ள வரிவடிவத்தில் என்ன குறை இருக்கிறது அதை ஏன் நாம் மாற்றி புது குழப்பத்தை ஏற்படுத்திதரவேண்டும். வேற்று மொழிகளுக்கு நாம் வரிவடிவம் கொடுக்கும் அளவிற்கு நம் மொழியை கொண்டுசெல்வதுதான் நாம் நம் மொழிதைக்கு செய்யும் நன்றிகடன். அதை விடுத்து செய்நன்றி மறப்பது என்பது நமக்கு அழகல்ல. இதை யார் என்ன காரணத்திற்க்காக செய்ய முயல்கிறார்கள் என்று ஆராய்ந்து முன் எடுக்கும்  முன்பே முற்றுபெறவைப்பது நன்று.