திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த மாதம் 26 ம் தேதி திருச்சியில் ..!

திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த மாதம் 26 ம் தேதி திருச்சியில் தனது தேர்தல்  கூட்டத்தில் உரையற்ற இருக்கிறார் இதற்காக தமிழக பி.ஜ.பி கணனிமூலம் இருக்கைகளை உறுதி செய்வதற்கான முன்பதிவு முறையை அறிமுகபடுத்த இருக்கிறது.நல்லது ஆனால் இந்த ஒட்டு போடவராத கூட்டத்தை வைத்து கொண்டு இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.அடித்தட்டு மக்களை அழைத்துவந்து உரிய முறையில் உரையாற்றினால்  பலன் உண்டு இதை புரிந்து கொண்டு செயல் படுவது தமிழக பி.ஜ.பி க்கு  நன்று .அடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொளுவதர்க்காக மோடியுடன் சேர்ந்து தற்போது பி.ஜ.பி.யில்  சேர்ந்த சுப்ரமனியசுவாமி வருவாரா என்று தெரியவில்லை.பி.ஜ.பி யில் சுப்ரமணியசாமி சேர்த
தே வளமான வருங்கால இந்தியாவை எதிர்பார்க்கலாம்.காரணம் சுப்ரமணிய சாமீ யை பற்றி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.மோடியின்  உரையாற்றலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தொட்டு  இலங்கை தமிழர்களின் பிரச்னையை சேர்த்து  பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.ஆனால் தமிழகத்தில் தமிழர்களின் பிரச்சனையை வடநாட்டு தலைவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து  உணர்ச்சிவயப்பட கணிசமான மக்கள் இங்கே கிடையாது.இந்த நேரத்தில் நாம் மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தாய் மொழி ஓரளவிற்கு காப்பற்றபட்டதிற்க்கு.இல்லை என்றால் எந்தனை விழுத்து விழுத்து நாம் இந்தியை கற்றுகொன்டாலும் அரசியலில் பெரும்பங்கை நாம் எட்டிவிட முடியாது வாடா இந்தியர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்திருக்கும்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரையும் வாழவைக்குமா ?மோடியின்  திருச்சி கூட்டம் வெற்றிகரமாக முடியட்டும்.மக்களின் மன நிலையில் மாற்றம் வர வாழ்த்துக்கள்