மனவளர்ச்சி நிரம்பிய டெல்லி சிறுவன் ; முயல் உடம்பில் ஒரு வேங்கை

டெல்லி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவனுக்கு சிறுவன் என்ற முறையில் மூன்றாண்டுகள் தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்பளித்து இருக்கிறது.அதிக சிதரவதை செய்தவன் என்று பாதிக்கப்பட்ட பெண் இறப்பதற்கு முன்  அடையாளம் காட்டப்பட்டவனுக்குதான் சிறார் என்ற முறையில் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.வயதை மட்டும் வைத்து கொண்டு ஒருவனை சிறார் என்ற வகையில் சேர்ப்பது எந்த அளவிற்கு சிறந்தது  என்று தெரியவில்லை.ஒருவனுடைய மனமுதிர்ச்சியை கொண்டுதான் அவனுடைய வளர்ச்சியை எடைபோடவேண்டும்.
சிலருக்கு வயது அதிகமாக இருக்கும் ஆனால் அவர்களுடைய மனவளர்ச்சி குன்றியவராக இருப்பார்கள் அவர்களை இந்த சமூகம் எந்த பார்வையில் பார்க்குமோ,இந்த தண்டனை சட்டம் எந்த பார்வையில் பார்க்குமோ அதே பார்வையில்தான் இந்த வழக்கில் சப்பத்தபட்ட மனவளர்ச்சி நிரம்மிய  சிறுவனை நாம் பார்க்கவேண்டும்.மனவளர்ச்சி குன்றியவன் வயது அதிகமானாலும் மனதளவில் வளர்ச்சியடையாமல் இருக்கிறான் .அதே போலத்தான் வயது குறைந்த சிறுவர்கள் சிலர் மனவளர்ச்சியில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.இதை மனதில் கொண்டு நீதி கிடைக்குமானால்  வரும்காலங்களில் இதை போன்றதொரு குற்றத்தை சிறுவர் என்றபோர்வையில் மறைத்து கொண்டு நிகழ்த்தாமல் தவிர்க்கலாம்