திருடு ....என்னைவிடு.....

 நாட்டில் திருட்டுக்கள் அதிகமாகி விட்டன தினமும் தொலை காட்சியில் கொள்ளை செய்தி இல்லாத நாட்களே இல்லை.ஆனால் இதைப்பற்றி யாரும் பெரிதாக நினைப்பது இல்லை  கண்டுகொள்வதும்  இல்லை.இந்த திருடுகள் அனைத்தும் கிராமம் நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் பரவலாக நடக்கிறது.திருடர்கள் என்றால் இரவில் யாரும் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து வருவார்கள் என்று நினைத்தால் நாம் பழைய காலத்து மனிதர்களாக இருப்போம் ஆனால் இப்பேது அப்படி எல்லாம் இல்லை. இப்போது நடக்கும் திருட்டுகள் அனைத்தும் அனாசியமாக ஏன் பகலிலேகூட நடக்கிறது.மக்கள் இதற்க்கு பழகிவிட்டர்களோ என்ற எண்ணம் வருகிறது.தொலைகாட்சியில் வரும் கொள்ளை சம்பவத்தை பார்க்கும் மக்கள்  இன்றைக்கு எத்தனை பவுன் தங்கம் திருட்டு போய்  விட்டது  என்று அறிந்து கொள்ளும் மனநிலையிலேயே இருக்கிறார்கள் அதோடு இந்த சம்பவம் முடித்து போய்  விடுகிறது. பட்டபகலில் நடைபெறுகின்ற இத்தகைய செய்தியை கூட ஒரு ஆச்சிரியத்தோடு  நாம் முடித்து கொள்ளுகிறோம்.இதை எல்லாம் பார்க்கும் போது மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்றே புரியவில்லை நம்மை வாழவிட்டால் போதும் என்று சிறு கூட்டுக்குள் சுருங்கி விட்டார்களா அல்லது  வாய்ப்பு கிடைக்கும் போது பதில் செல்லலாம் என்று காத்திருக்கிறார்களா? நாம் என்ன செய்ய முடியும் என்று எல்லாம் அவன் செயல் என்று அடங்கி விடுகிறார்களா.இதை பற்றி எந்த ஒரு அரசியல் வாதிகளும் பெரிதாக வாய் திறந்ததாக தெரியவில்லை.இதற்கெல்லாம் யார் பதில் சொல்லுவது யாருக்கும் புரியவில்லை ஆனால் காலத்தின் கையில் எல்லா நிகழ்வுகளுக்கும் பதில் உண்டு அது பதில் சொல்லும்.