பாராட்டும் பதக்கங்களும்

பாராட்டும் பதக்கங்களும் ஒரு படைப்பாளிக்கு  அவரது துறையில் செம்மை படுத்துவதற்காக செய்ய கூடிய ஒருசெயல். அப்படி கௌரவபடுத்துவதர்காக கொடுக்கப்படும் அந்த பாராட்டும் பதக்கமும் அவர்களை  செம்மை படுத்துகிறதா அல்லது அவர்களை கர்வபடுத்துகிறதா.ஒருவர் ஒரு பாராட்டோ பதக்கமோ  பெற்றால் மனதை சஞ்சல பட வைக்கிறது மீண்டும் அந்த பாராட்டையும் பதக்கத்தையும் நோக்கியே அந்தந்த துறையில் அவர்களது பயணம் தொடர்கிறது.எதோ ஒன்றை எதிர் பார்த்து செய்கின்ற வேலை மனதுடன் ஓட்ட மறுக்கிறது வேலையினுடைய நிலைத்தன்மை கேள்விக்குறியாகி விடுகிறது.ஒரு அர்பணிப்புடன் செய்கின்ற பணிக்கும் எதிர்பார்ப்புடன் செய்கின்ற பணிக்கும் நிரம்பவே வித்தியாசங்கள் இருக்கின்றன மேலும் எதிர் பார்த்த பாராட்டோ  பதக்கமோ கிடைக்காத பட்சத்தில் மனம், தான் செய்த வேலையின் குறைபாட்டை  காண மறுத்து, பிறர் மீது குற்றம் சுமத்துவதில் ஆரம்பித்து  ஏதேதோ செய்ய ஆரமித்து விடுகிறது இதனால் மனம் சன்சலமடைந்து நல்ல முறையில் படைப்புகளை தரமுடிவதில்லை அல்லது தன்னுடைய படைப்புக்கு எப்படியாவது குறுக்கு வழியில் பதக்கங்களையும் பாராட்டுகளையும் பெற்றுவிடவேண்டும் என்ற நினைப்பு வருகிறது.நல்ல படைப்பாளிக்கு பாராட்டும் பதக்கங்களும் மக்களிடமிருத்து தானாக கிடைத்துவிடும். அதன் பிறகு  தகுதியானவருக்கு பாராட்டு விழ எடுப்பது தான் முறையாக இருக்கும்,வளமான படைப்புகள் மக்களுக்கு நிறைய கிடைக்கும்.தடுக்கி  விழ்ந்ததுக்கெல்லாம் பாராட்டும் பதக்கமும் கொடுத்தால் நிஜமான படைப்புகள் வெளியில் தெரியாமல் போய்விடக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.இந்த பாராட்டும் பதக்கமும் பெறுபவரை கௌரவிக்க வேண்டுமே தவிர கூச்சபடவைத்து விட கூடாது. பாராட்டுக்கள் எல்லை மீறி போவதன் விழைவு குருவி தலையில் பணம் பழத்தை வைப்பது போன்று அது அவரை கிழே விழ செய்து விடும். பாராட்டை பெறுபவர் தன நிலை அறிந்தால் வெற்றி தவறாது, வீழ்வது நிகழாது