பார்வை அற்றவர்களின் பரிதாப போராட்டம்

பார்வை அற்ற பட்டதாரிகளின் கோரிக்கை போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது சென்னை மாநகரில் ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள் தங்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு ஆளில்லை என்று அவர்கள் காட்சி உடகங்களில் புலம்புவது கண்ணிருந்தும் குருடர்களாய் வாழும் நம் அரசியல் வாதிகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது.வாழ்வில் ஒளியேற்ற வேண்டியவர்கள் இவர்களின் போராட்டங்களை முடக்க பார்ப்பது மிகவும் பரிதாபத்திக்குரிய ஒரு நிகழ்வு.இவர்களின் போராட்டம் தமிழ்நாடு முழவதும் பரவத்தொடங்கி இருக்கிறது.இவர்களின் முக்கியமாக கோருவது நாங்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் எங்கள் கோரிக்கைகளை அவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். முதல்வர் இவர்களை சந்திப்பதை தவிர்பதர்க்கு என்ன காரணம்.இந்த பார்வியாற்ற மனிதர்களை அங்கும் இங்கும் அலைகளிப்பது சரிதானா.இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பிறகு விவாதிக்கலாம் இவர்களை சந்தித்து கோரிக்கைகளை செவிமடுத்தாலே இவர்களின் மனபாரம் குறையும் அதை செய்தாலே இவர்களுக்கு பிகபெரிய சந்தோசம் ஏற்படும் இவர்களின் போராட்டமும் ஒரு நிலைக்கு வரும்.இவர்களை காட்சி உடகங்களில் பார்க்கும் போது இவர்கள்  போராடித்தான் வாழவேண்டும் என்றால் இந்த ஜனநாயக அமைப்பு என்பதே தவறான பாதையில் பயணிப்பதாக ஆகிவிடும்,  மனிதாமிமானம் இல்லாமல் போய்விடும் .மனம் மாறுங்கள் மாற்றுதிரனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்