,உனக்கு நீயே அன்பு செலுத்து

உன்னுள் இருக்கும் மானுடத்தை  நீ கண்டுகொண்டால் மனம் என்ற  ஒன்றை புரிந்து  கொள்வாய் அதுவரை கடல் அலையை போலே அகம் புறம் என்று அலை அடித்துக்கொண்டுதான் இருக்கும்.ஒரு கடல் அதன் ஆழத்தில் அமைதியாகத்தான் இருக்கிறது ஆனால் கரை மீது எப்போதும் ஓயாது அலை அடித்துக்கொண்டுதான் இருக்கும்.உன் மனதின் ஆழத்தின் அமைதியை உணர்ந்து கொண்டால் உன்னுள் நடக்கும் தர்க்க போராட்டம் தானாக உருத்தெரியாமல் போய்  விடும்.
குறைந்த பட்சம் உனக்கு  நீயே  பொய் சொல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி  வாழ்வது என்பது ஒரு வகையான தவம் இதை செய்வதை தொடக்கி விட்டால் தோல்வியின் முடிச்சிகள் ஒன்று ஒன்றாக  அறுந்து விழுத்துவிடும்.உன்னையே நீ விருப்பு
,உனக்கு நீயே அன்பு செலுத்து, வெற்றிபடிகட்டுகள் உன்  கண்முனே தெரிய தொடங்கும்  நமக்கு நாமே உண்மையை சொல்லுவதற்காக ஏன் தயங்கவேண்டும். நாம் இப்போதிருக்கும் நிலை  உணர்த்து நடந்தால் எந்த உயரத்தையும் யாராக இருந்தாலும்   அடைந்து விடமுடியும்.  நீ உனக்காக உன்  நிலையின் உயரத்தை அளப்பதற்கு கற்பனையை நாடாதே அது ஆபத்து. நம்முடைய திறமையை உணர்தாதவரை யாரும் அவர்களாக உணர்த்திட  மாட்டார்கள்.எது உன் குறிக்கோள் என்பதை அறிந்து கொள் அதன் உயரத்தை அளந்துகொள்,அதன் பயண பாதையை புரிந்து கொள். இப்போது நீ இருக்கும் உயரம் உனக்கு புரியும் நீ தொடவேண்டிய சிகரத்தின் உயரமும் பயணபடவேண்டிய தூரமும் விளங்கும.மனமே மாற்றத்திற்கான  மிக பெரிய உந்து சக்தி அந்த சக்தியை  உனக்கு பயன் படுத்த கற்றுக்கொள் மனமே உந்தன் முதல் அறிமுகம் அதனை நண்பனாக்கி கொண்டால் உனக்கு ஏவல் ஆளாக உன் கட்டளைக்கு கட்டுப்படும் சக்தியாக மாறிவிடும்  அதன் வேகம் உந்தன் வெறிகொண்ட வெற்றியை சொல்லமுடியாத  கால அளவில் உன்னிடம் சமர்பிக்கும்.வாழ்வில் நீ அடைய முடியாது என்ற நினைத்திருந்த உயரத்திற்க்கெல்லாம் உன்னை  அனாசியமாக இழுத்து செல்லும் மனமாற்றம் ஒன்றுதான் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வித்து அதை உணர்ந்து கொள் வாழ்வில் வசந்தம் மலரும் புரிந்து கொள் வாழ்க அன்புடன் வளர்க அமைதியாக