கணணி முன்பதிவும் மக்களின் ஏமாற்றமும் ................!

கணணி மூலம் ரயில்களில் முன்பதிவு செய்வதில் ஒரு முறைபடுத்துதல் வேண்டும் குறுப்பிட்ட சதவிகிதம் மட்டுமே கணணி முறையில் முன் பதிவு செய்ய முடியும் என்று ஒரு முறைபடுத்துதலை  கொண்டுவரவேண்டும்.இன்னமும் நம்மில் அதிகமானவர்கள் ரயில் நிலையம் வந்துதான் முன்பதிவு செய்கிறார்கள் இதை பயண சீட்டு முன்பதிவிர்காக ரயில் நிலையங்களில்  குவியும் மக்களை பார்த்தல் தெரிகிறது.முக்கியமாக நிகழ்வுகளுக்காக தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு செய்ய வந்தால்.முன்பதிவு தொடக்கிய சிறிது நேரத்தில் முடிவடைந்து விட்டது என்ற அறிவிப்பு வருகிறது.ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இந்த முன்பதிவு வசதியை பயன்படுத்தமுடியும் என்ற சூழ்நிலை நம்மை அறியாமலேயே வந்து விட்டது. பேருந்துகளில் பயணிக்க பயனகட்டணம் அதிகமாக இருக்கிறபடியால் மக்கள் இந்த ரயில்பயணத்தை விருப்புகிறார்கள்.ஏழைகளுக்கும் மத்தியதரவர்கத்திர்க்கும் இந்த ரயில் பயணம் ஒரு தான் குறைந்த பணத்தில் நிறைந்த பயணத்தை தருகிறது.எனவே இந்த முன்பதிவை முறைபடுத்த வில்லை என்றால் நக்கலுக்கு இருக்கும் இந்த குறித்த கட்டண ரதம் எட்டா கணியகிவிடும்.கணணி முறையில் குறுப்பிட்ட சதவிகிதத்தை ஒதிக்கி விட்டு மீதியை ரயில் நிலையங்களில் வரும் முன் பதிவாளர்களுக்கு கொடுத்தால் கணணி பயன்படுத்ததவர்களுக்கு வசதியாக இருக்கும் செய்வார்களா