மாறுமா மனம் மன்றாடும் தமிழர்கள்

தமிழ்நாட்டில் இம்போது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு வாழ்பவர்களை காட்டிலும் பிறமாநிலத்தை சேர்தவர்கள்தான் அதிகமாக நிலம் வாங்குகிறார்கள் .குறைந்தபட்சம் தமிழகத்தின் குடும்ப அட்டையை பதினைந்துவருடங்கள் பயன்படுத்தியவர்கள் தான் தமிழகத்தில் நிலம் வாங்க தகுதி என்ற ஒரு வரை முறையை கொண்டுவரவேண்டும் இல்லையேல் விரைவாக தமிழகத்தில் தமிழர்கள் அகதிகள் ஆக்கபட்டுவிடுவார்கள் தமிழகத்தின் அரசு உயர்பதவிகளில் இருப்பவர்கள் ஐம்பது சதவிகிதத்திற்கு மேலாக பிற மாநிலத்தை சேர்தவர்கள் தான். இவர்கள் முழுமையாக இங்கே வந்து குடியேறிவிட்டார்கள்.இவர்களின் பதவியை மூலதனமாக வைத்து இன்னும் பலபேர்களை இழுத்து வந்து இங்கே குடி யேற்றிவிட்டார்கள்.அவர்கள் உயர்பதவில் இருப்பவர்களை தங்களுக்கு சாதகமான வேலைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் இதன் விழைவு சரியான பாதையில் தமிழனுடைய வாழ்கை  பயணம் நகர்வது இல்லை.சில இடங்களில் இவர்களின் தயவு இல்லாமல் வாழஇயாத சூழ்நிலைகள் கூட அரங்கேறுகிறது.சென்னையில் அதிகபடியாக பிற மாவட்டத்தாரை விட பிற மாநிலத்தார் வருடத்திற்கு வரு\டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள்.இதற்க்கு காரணம் நம்மிடம் உள்ள ஒற்றுமை இன்மைதான் இதை பயன்படுத்தி கொண்டவர்கள் நம்மை பிரித்தாண்டு கொண்டே இருக்கிறார்கள்.நாமும் அவர்கள் தூக்கி போடும் வஸ்துகளை பிடித்து கொண்டு சாமரம் வீச தயாராகி விடுகிறோம்.தமிழ் நாட்டில் வாழும் தமிழனாவது அகதிகள் ஆகாமல் இருக்க இந்த அரசியல்வாதிகள் விடுவார்களா இல்லை அதையும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்களா. தமிழர்களே தமிழர்களே விழ்த்து கொள்ளுங்கள் எல்லோரும் நம் நண்பர்கள்தான் முகத்தை விறு முகவரியை வாங்கும் நிலைக்கு நாம் வரவேண்டாம்.