சுனாமி எழும்பும் கள்ள காதல்

காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் இனம்புரியாத அன்பு செலுத்துவது சரி,அது என்ன கள்ள காதல்,ஆண்கள் மனைவியை விட்டு விட்டு வேறு பெண்ணிடம் கொள்ளும் ஒரு மயக்கம் அதேபோல் ஒரு பெண் தான் கணவனை விட்டு வேறுஒரு ஆணுடன் கொள்ளும் ஒருவித மயக்கம். இந்த வகையில் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத ஒருவித மயக்கம் தான் இந்த கள்ளகாதல் என்று கொள்ளலாம்.
இந்த கள்ள காதலால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை போக்கையே புரட்டி போட்டு சின்ன பின்ன மாக்கி இருக்கிறது.இது பெரும்பாலும் பொருளாதாரத்தின் தேவையால் ,பேராசை காரணமாக,காமத்தின் மறு பிரசவத்தால்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை விமர்சிக்கும் சுய ஒழுக்கமற்றவர்களால் தான் இது ஆங்காங்கே முளைத்து இன்று பரவலங்கபட்டுவிட்டது.இதன் விளைவு நம் சமுதாய கட்டுக்கோப்பில் ஆண்களை வெகுவாக பாதிக்கிறது.தனக்கு  மட்டுமே சொந்தம் என்று  நினைத்திருக்கும் தன் மனைவி பிறருடன் கேவலமான காம இச்சைக்காக தொடர்புகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் ஒரு ஆண் படும் வேதனையை எழுத்துகள் கொண்டு நாம் எழுதுவது முடியாது, சமுதாய பார்வையில் அவன் புழுவாக நெழியும் போது அந்த வேதனையின்  வெளிப்பாடு அந்த உணர்ச்சியை உணராமல் யாராலும் தெளிவுபடுத்த முடியாது அதன் விளைவுதான் கொலைகளும்,தற்கொலைகளும்.அதேபோல் தான் தனக்கு சொந்தமான தன கணவன் வேறு பெண்ணுடன் தொடர்புடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் அந்த பெண்ணின் வேதனையும்.
ஒரு ஆண் தன்  மனைவியுடன் பொது இடத்திற்கு வரும்போது அவனுக்கு இருக்கும் மனநிலையும் தனிமையில் இருக்கும்போது இருக்கும் மனநிலையும் வேறுமாதிரியாக இருக்கிறது.அதேபோல்தான் ஒரு பெண்ணின் நிலையும். இது எவ்வாறு நிகழ்கிறது.நம்முடைய சுயகட்டுபாடு இல்லாமையும் தான் செய்யும் நிகழ்வு அனைத்துமே சரியானவை என்று நினைக்கும் மனபாவமும்தான்.
சமுதாயம் என்பது மனித செங்கற்களால் கலாச்சாரம் என்ற கட்டுபாட்டால் ஆனா ஒரு அருமையான கோயில் அதில் அங்கொன்றும் இங்கொன்றும் செங்கற்கள் விழும் பட்சத்தில் சமுதாயம் என்னும் இந்த ஜன சமுத்திரத்தில் சுனாமி எழும்பும் சுகமான, சுமூகமான வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். வழக்கை என்பது வெறும் காம சுகத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் எனலாமே நமக்கு நலமே.