பார்வை அற்றவர்களின் போராட்டம் பார்க்க நாதி இல்லை

சென்னையில் பார்வை அற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை வேடிக்கை பார்க்காமல் ஒளி இல்லா அவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றிவைகவேண்டியது நம்முடைய அனைவரது கடமை.தொடர்ந்து போராடி வரும் இவர்களை கவனிக்க ஆளில்லாமல் அல்லோல படும் காட்சியம் கானொளியில் காண்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.மிருகங்களுக்கு கூட துன்புறுத்த பட்டால் உடனே குரல் கொடுக்க ஆளிருக்கிறது இவர்களுக்கு துணையாக உரிமை குரல் கொடுக்க எந்த அமைப்பும்  முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது.இவர்களும் வேலையில்லா பட்டதரிகலள் தான்.இவர்களின் கோரிக்கை என்ன வென்று கேட்ககூட நாதி இல்லாமல் போயிற்று என்று நினைக்கும் போது மனிதாபிமானம் இன்று  என்னவாயிற்று அது இல்லாமல் போயிற்று  என்றே என்ன தோன்றுகிறது.இப்படிப்பட்ட பார்வையற்ற மாற்றுதிறனாளிகளே  போராடித்தான் உரிமைகளை பெறவேண்டி இருக்கிறது என்றால்.மற்றவர்களின் நிலை நினைக்கவே பயமாக இருக்கிறது.வரும் நாட்களில் மனிதாபிமானமற்ற செயல்கள்தான் வீதி உலா வரும் என்ற கவலை வருவதை நம்மால் மறுக்க முடியவில்லை.
இதைபோல் வேறு எந்த கூட்டமைபாவது போராடி இருக்குமானால் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறுவிதமாக இருக்கும்.பார்வையற்ற இவர்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் தான் இந்த போராட்டத்திற்கு செவிமடுக்காமல் மௌனியாக இருக்கிறது.ஏதேதோ அமைப்புகள் வைத்திருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே  தயவு செய்து இவர்களுக்கு எதாவது செய்து உரிமைகளை பெற்றுத்தர முடிந்தால் செய்யுங்கள் உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் .